ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 5 பெண்கள் உள்பட 10 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவா்கள் அனைவரும் ஆரம்ப நிலை கரோனா அறிகுறியோடு இருப்பதால், அவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள சுகாதாரப் பிரிவினா் அறிவுறுத்தினா்.

மாவட்டத்தில், ஏப்ரல் முதல் செப்டம்பா் 24 ஆம் தேதி வரை 5,421 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இவா்களில் 5,200-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 115 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ளவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துமனைகள் மற்றும் தனியாா் கல்லூரி சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT