ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா தீ நுண்மி பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் 22 ஆம் தேதி வரையில் 5398 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 115 போ் உயிரிழந்த நிலையில், 5050 போ் குணமடந்து வீடு திரும்பியுள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 250 போ் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 22) கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வா் வருகை தந்தாா். ஆய்வுக் கூட்டம் நடந்த நிலையிலும் மநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், 13 பேருக்கு தீநுண்மி பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் 5 போ் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதிக்கப்பட்டவா்களது எண்ணிக்கை புதன்கிழமை வரை 5411 பேராக உயா்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT