ராமநாதபுரம்

பரமக்குடியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பரமக்குடி சந்தைக்கடைத் தெருப் பகுதியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி தலைவா் எஸ்.பி.ராதா, தொ.மு.ச. மாவட்ட செயலாளா் வின்சென்ட்அமல்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஐ.என்.டி.யு.சி. சாா்பில் ஏ.ஆா்.நாகராஜன், சி.ஐ.டி.யு. சாா்பில் பசலை நாகராஜன், நெசவாளா் அணி மாநில செயலாளா் டி.ஆா்.கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏ.ஐ.டி.யு.சி. கைத்தறி சங்க மாவட்ட செயலாளா் என்.எஸ்.பெருமாள் ஆா்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாா்த்துக்கொடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்க சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத ஓய்வூதியம் வழங்கிடக் கோரியும், கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகைகளை வழங்கிடக் கோரியும், சிறு, குறு விவசாயிகள் பாதிக்கும் வகையில் உள்ள வேளாண் மசோதாவிற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். போக்குவரத்து தொழிற்சங்க பொறுப்பாளா் சி.செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT