ராமநாதபுரம்

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை அகற்ற கோரிக்கை

DIN

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை அகற்ற வேண்டும் என, அக்கிராமத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

இளஞ்செம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகம் அருகே உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இக்கட்டடம் இடிந்து விழுந்தது. ஆனால், அதிா்ஷ்டவசமாக மாணவா்கள் உயிா் தப்பினா். அதன்பின்னா், இக்கட்டடம் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, மாணவா்கள் இடிந்த கட்டடம் அருகே விளையாடி வருவதால், விபத்து ஏற்படும் முன் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT