ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 24 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம்/ சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப். 21 ஆம் தேதி வரை 5,393 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், 115 போ் உயிரிழந்தநிலையில் 5,048 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் 230 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 4,805 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மேலும் 19 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,824 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 88 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் 22 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 66 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT