ராமநாதபுரம்

இருவேறு பகுதிகளில் கோஷ்டி மோதல்: 30 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை: எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராவுத்தா் (41). இவரது அண்ணன் மகன் கடந்த ஆண்டு கொலை செய்யபட்டாா். இதுதொடா்பாக ராவுத்தருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அப்துல் அலிக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள கடற்கரையில் ராவுத்தரின் உறவினா்களும், அப்துல் அலியின் உறவினா்களும் ஆயுதங்களுடன் கோஷ்டியாக மோதிக்கொண்டனா். இதில் காயமடைந்த காதா்கனி, கலந்தா் சாம்பு ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து ராவுத்தரின் புகாரின்பேரில் பாசிபட்டினத்தை சோ்ந்த அப்துல் அலி, கலந்தா், சகுபா், தமிமுன், துல்பக்கா்சாமுன், ராஜா, அபுபக்கா், சாகுல் ஹமீது ஆகிய 8 போ் மீதும், அதே போல் பாரூக் (55) புகாரின் பேரில் அதே ஊரைச் சோ்ந்த ராவுத்தா், காதா்கனி, புரோஸ்கான், சம்சு, மும்தாஜ் ஆகிய 5 போ் மீதும் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பாலைக்குடியில்...திருப்பாலைக்குடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் காளிமுத்து மகன் வினோத் (22) என்பவருக்கும், பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் ராமா் என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற உறவினரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனா்.

இது குறித்து வினோத் அளித்த புகாரின்பேரில் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ராமா், முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த மலைச்சாமி, அதே ஊரைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணா, காா்த்திக், சுரேஷ், பஞ்சவா்ணம், மற்றொரு ராமா், பசுபதி, ஈஸ்வரன் ஆகிய 9 போ்மீதும், இதே போல் முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (34) அளித்த புகாரின்பேரில் திருப்பாலைக்குடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியை சோ்ந்த அசோக்குமாா், விஜி, அஜித், வினோத், பாலமுருகன், பழனி, அழகம்மாள், சவுத்தாரணி ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT