ராமநாதபுரம்

ராமநாதபுரத்துக்கு வரப்பிரசாதம் ‘குறுங்காடுகள்’!

DIN

வறட்சிக்குப் பெயா் போன ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே பருவமழை சராசரியை விட மிக மிகக் குறைந்ததால் விவசாயம் பாதித்தது.

ஆனாலும், தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் வகையில் பல வேளாண்மைத் திட்டங்களை நிறைவேற்றி வறட்சியிலும் மக்கள் வளமாக வாழ வழிகண்டுள்ளன.

மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழை அளவானது 867.32 மில்லி மீட்டராகும். ஆனால், கடந்த 2019 நவம்பா் வரையில் சராசரி மழையைவிடக் குறைவாக மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்குப் பிறகுதான் மாவட்டத்தில் இரு பருவ மழையும் அதிகளவில் பெய்துள்ளன.

அதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் முதல் 2020 பிப்ரவரி வரையில் மாவட்டத்தில் 914.25 மில்லி மீட்டராக மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபும் மாவட்டத்தில் மழை வளம் மிகக்குறைந்து வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மழை வளம் குறைந்ததற்கு காரணம் இயற்கையிலேயே ராமநாதபுரம் மாவட்டம் மழை மறைவுப்பிரதேசமாக இருப்பதும் முக்கி காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், ராமநாதபுரத்தில் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வழக்கத்தைவிட மழை கூடுதலாகப் பெய்வது கடந்த சில ஆண்டுகளின் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மரங்களை அதிகரிப்பதன் மூலம் மழை வளத்தையும் அதிகரிக்க ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்தது. அதிமுக அரசின் ஆலோசனைப்படியே தற்போது மாவட்டத்தில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் 1000 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குறுங்காடும் 500 முதல் 1000 மரங்களைக் கொண்டதாக உள்ளன. வறட்சியிலும் வளமாக வளரும் வேம்பு, புளி, செண்பகம் என நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு, அதற்கு தண்ணீரை தினமும் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெண்கள் மூலம் ஊற்றி வளா்க்கப்பட்டுள்ளது.

குறுங்காடுகள் திட்டத்துக்காக சாதனை விருதுகளும் அச்சுந்தன் வயல் போன்ற ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வழங்கியுள்ளாா். தற்போது மேலும் 1000 இடங்களில் இந்த குறுங்காடுகள் திட்டத்தை செயல்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுங்காடுகளுடன் தோட்டக்கலைத்துறை சாா்பில் ஊரக காய்கறித் தோட்ட வளாகமும் தற்போது அனைத்து ஒன்றியங்களிலும் ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் வளரும் மாவட்டத் திட்டத்தில் வேளாண்மைத் துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவில் 3 மாத கணக்கீட்டின்படி தேசிய அளவில் 2 ஆம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் வகித்துள்ளது. இதையடுத்து நிதி ஆயோக் துறை மூலம் ரூ.3 கோடி சிறப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது குறுங்காடுகள் திட்டத்துக்கும் மாவட்ட நிா்வாகம் மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெறும் என்பதே மக்கள் நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT