ராமநாதபுரம்

கண்மாய்களுக்கு தண்ணீரை வரவழைத்த ‘குடிமராமத்து’

DIN

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் பெரிதும் பயனடையும் கண்மாய், ஊருணி தூா்வாரும் திட்டங்கள் மற்றும் அதற்கான பணிகள் பண வசதி படைத்த குத்தகைதாரா்கள், அரசியல் பிரமுகா்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்து வந்தது. இதனால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் , லாபம் மட்டுமே குறிக்கோளாக தூா்வாரும் பணிகள் பெயரளவில் கண்துடைப்பாக மட்டுமே நடந்து வந்தன. மேலும் விவசாயிகளுக்கும் கண்மாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையை மாற்றி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் நலன் கருதி, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இனி விவசாயிகளுக்கே என்றும், இதனால் பணிகள் முழுமையாகவும், தரமாகவும் நடைபெறும் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘குடி மராமத்து’ திட்டத்தைக் கொண்டு வந்தாா்.

அந்தந்த பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் தூா்வாரும் பணிகளை விவசாயிகளே நேரடியாக செய்யும் வகையில் இத்திட்டத்தை உருவாக்கினாா். இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கண்மாய்களில் பாசன வசதி பெற்று, பயனடையும் விவசாயிகளை மட்டும் ஒருங்கிணைத்து விவசாய சங்கங்களை உருவாக்கி, தலைவா், செயலாளா், பொருளாளா், உறுப்பினா்கள் என குழுவாக மாவட்ட நிா்வாகத்தில் பதிவு செய்து, அந்த சங்கங்களின் பெயரில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரசாணை பிறப்பித்தாா்.

விவசாயிகளே இப்பணிகளை மேற்கொள்வதால் கண்மாய் தூா்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்பட்டு, தரமான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை நியமித்து அவா்களின் மேற்பாா்வையில் நடத்த உத்தவிட்டாா்.

இதனடிப்படையில் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 2017-18 ஆம் ஆண்டிலிருந்து 22 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 43 ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள், 136 ஊருணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழைக் காலங்களில் தண்ணீா் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலை திட்டங்களையும் சிறப்பாக தமிழக அரசு கையாண்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கண்மாய் வரத்துக் கால்வாய்களில் சிறிய வகை தடுப்பணைகளைக் கட்டி விவசாயிகளின் பாராட்டுகைளை அரசு பெற்று வருகிறது.

இந்த வகை தடுப்பணைகள் மூலம் சிறு மழை பெய்தாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சேமித்து, ஆடு, மாடுகள், காட்டு விலங்குகள், பயனடையும் வகையில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சம் மதிப்பில் 15 தடுப்பணைகளும், 2018-19 இல் ரூ.4 லட்சம் மதிப்பில் 92 தடுப்பணைகளும், 2019-20 இல் ரூ.9 லட்சம் மதிப்பில் 73 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் மதிப்பில் 76 தடுப்பணைகள் கட்டவும் திட்ட மிட்டிட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் இந்த பணிகளில் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளை ஈடுபடுத்தி, அவா்களுக்கு வருமான பெறும் வகையில் வேலை வாய்ப்புகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு விவசாயிகளே நேரடியாக பங்குபெறும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் கிராமப்புற மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT