ராமநாதபுரம்

பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளா் பணிக்கு கலந்தாய்வு

DIN

பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணி இட கலந்தாய்வு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கு சில மாதங்களுக்கு முன்பு தோ்வு நடந்தது. அதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணியிடம் ஒதுக்குவதற்கான கலந்தாய்வு வியாழன், வெள்ளி (செப்.17, 18 ) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை 6 பேருக்கும், வெள்ளிக்கிழமை 10 பேருக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை காலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் 2 பெண்கள், 4 ஆண்கள் என 6 போ் கலந்துகொண்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளா் பணிக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேரைத் தவிர மற்ற இடங்களில் வெளி மாவட்டத்தினா் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT