ராமநாதபுரம்

உச்சிப்புளியில் வீட்டில் தனியாக வசித்த பெண்ணைக் கொன்று நகை கொள்ளை

DIN

ராமநாதபுரம் அருகே வீட்டில் தனியாக வசித்த பெண்ணைக் கொலை செய்து நகையுடன் தப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் உள்ளது ரெட்டையூரணி கிராமம். இங்கு வசித்த காமராஜ் என்பவரது மனைவி விஜயராணி (51). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. காமராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். விஜயராணி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து

வந்துள்ளாா். வியாழக்கிழமை காலையில் விஜயராணியின் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினா் அவா் கழுத்தில் காயத்துடன் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு உச்சிப்புளி போலீஸாருக்குத் தெரிவித்தனா். போலீஸாா் வந்து பாா்த்தபோது, விஜயராணியின் கழுத்து, முகம் ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

காவல் துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கைரேகை நிபுணா்களும் விஜயராணி சடலம் கிடந்த இடத்தைச் சுற்றி பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனா். பின்னா் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஐஸ் வியாபாரி மீது சந்தேகம்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு ஐஸ் விற்க வந்த சாயல்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவா் விஜயராணியிடம் வாடகைக்கு வீடு பிடித்துத் தருமாறு கேட்டுள்ளாா். அதனடிப்படையில் தனது வீட்டருகே ஐஸ் வியாபாரிக்கு விஜயராணி வாடகை வீடு பிடித்துத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஐஸ் வியாபாரி சில நாள்களுக்கு முன்பு விஜயராணியிடம் செலவுக்கு பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது விஜயராணி கொலை செய்யப்பட்ட நிலையில், ஐஸ் வியாபாரி தலைமறைவானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவரைப் பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT