ராமநாதபுரம்

திருவாடானையில் பிரதமர் கிஷான் திட்ட மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

1st Sep 2020 05:15 PM

ADVERTISEMENT

திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் பிரதமர் கிஷான் திட்டத்தில் நடைபெற்ற மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ராசு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராம் தாலுகா குழு உறுப்பினர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பிரதமர் கிசான் உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பதிவு செய்து அவர்களுக்கு உதவி வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.

இதில் மத்திய அரசின் பிரதமர் கிசான் உதவித் திட்டத்தில் மோசடி நடைபெற்றது என்றும் அதனைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மோசடி புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் கிசான் உதவித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களைக் கண்டுபிடிக்க ஏதுவாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : ramnad
ADVERTISEMENT
ADVERTISEMENT