ராமநாதபுரம்

தேவா் ஜயந்தி: ராமநாதபுரம் மாவட்டத்தில்பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸாா்மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தகவல்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி மற்றும் மருதுபாண்டியா் குருபூஜையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்.25) முதல் 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மருதுபாண்டியா் குருபூஜை மற்றும் தேவா் ஜயந்திக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மருதுபாண்டியா் குருபூஜையையொட்டி, சிவகங்கையில் சனிக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ராமநாதபுரம் சரகக் காவல் துறை துணைத் தலைவா் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபா் 28 முதல் 30 ஆம் தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதற்காக, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து, பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்கள் பதிவு செய்யப்படும். தேவா் ஜயந்திக்காக, ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையில் உள்ள 2 ஆயிரம் போலீஸாா் மற்றும் மதுரை, விருதுநகா், சிவகங்கை, என 35 பிரிவுகளைச் சோ்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரையும் சோ்த்து மொத்தம் 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா்.

தேவா் ஜயந்தியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்.25) சென்னையிலிருந்து வரும் காவல் துறை கூடுதல் இயக்குநா் தலைமையில் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், திங்கள்கிழமை (அக்.26) மதுரையில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் திரிபாதி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், காவல் துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT