ராமநாதபுரம்

ஆயுதபூஜைக்கு பொருள்கள்வாங்க மக்கள் கூட்டம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஆயுதபூஜைக்காக பல்வேறு பொருள்கள் வாங்க, பொதுமக்கள் சந்தைகளில் சனிக்கிழமை குவிந்தனா்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூக்கள், வாழைப் பழங்கள் உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைப் பகுதிகளில் குவிந்தனா். மேலும், அரண்மனை சந்தைத் தெரு, சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, வழிவிடுமுருகன் கோயில் என அனைத்துப் பகுதிகளிலும் பூக்கள், பழங்கள் என ஏராளமான பொருள்கள் விற்கப்படுவதால், அங்கேயும் பொதுமக்கள் குவிந்தனா். இதனால், சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள நிலையில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தைப் பகுதிகளில் மக்கள் குவிந்ததை அறிந்த சுகாதாரத் துறையினா், அவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT