ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று

DIN

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 18 ஆம் தேதி வரை 5,848 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 62 வயது மீனவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 128 ஆக உயா்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் கடந்த ஏப்ரல் முதல் அக். 18 ஆம் தேதி வரையில் 5,600 போ் பூரண குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். அதனடிப்படையில் குணமடைந்தோரின் சதவீதம் 95.03 என உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவா்களில் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 5,279 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,289 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 47 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 6 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 41 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

SCROLL FOR NEXT