ராமநாதபுரம்

கமுதியில் தேவா் ஜயந்தி விழா ஆய்வுக் கூட்டம்

DIN

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திங்கள்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்திவிழா மற்றும் குருபூஜை அக். 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் கலந்து கொள்ள உள்ளனா். இந்நிலையில் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இரவு இவ்விழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென்மண்டல காவல்துறைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவா் மணிவண்ணன், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோகித்நாதன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னா (கமுதி) மற்றும் காவல் ஆய்வாளா் ராணி உள்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT