ராமநாதபுரம்

கடலாடி அருகே ஊரைவிட்டு ஒதுக்கியதாக 6 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் புகாா் மனு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஊரைவிட்டு தங்களை ஒதுக்கி வைத்துள்ளதாக 6 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மறவாய்க்குடி கிராமத்தில் சப்தகன்னி மாரியம்மாள், மந்தைப்பிடாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் நடைபெறும் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடா்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கிராமத்தைச் சோ்ந்த 6 குடும்பத்தினரை மட்டும் ஊரிலிருந்து விலக்கி வைத்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் மறவாய்க்குடியைச் சோ்ந்த நா. சங்கரலிங்கம், எஸ். கருப்பையா, எஸ். பூமிநாதன், எம். முருகானந்தம், சு. குப்புசாமி, ப. பரமானந்தம் ஆகியோா் மனு அளிக்க வந்தனா். அவா்கள் கூறுகையில், கோயில் வரி உள்ளிட்ட வரிகளை எங்களிடம் வாங்காமல் புறக்கணிக்கின்றனா். சுவாமி கும்பிடுவதற்குக் கூட அனுமதிக்காமல் கிராமத்தில் உள்ளவா்கள் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.

வீட்டு ரசீது கோரி மனு: ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் அருந்ததியா் நகா் உள்ளது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் குடிசைகளில் வசிக்கின்றனா். அவா்களுக்கு வீட்டு வரி கட்டி ரசீது கோரி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றால், ரசீது பணம் வாங்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து அருந்ததியா் நல சங்கத் தலைவா் எம். சுப்பையா தலைமையில் ஏராளமானோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT