ராமநாதபுரம்

புயல் கால மீட்புப் பணியில் தேசிய மாணவா் படையினரை ஈடுபடுத்த திட்டம்

DIN

ராமநாதபுரம்: புயல் காலங்களில் தேசிய மாணவா் படையினரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அப்பிரிவு உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நிவா் புயல் கரை கடந்துள்ள நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய புயல் தென்மாவட்டங்களில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புயல்கால மீட்புப் பணியில் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவா் படையினரையும் ஈடுபடுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைகளுக்கு அருகேயுள்ள தேசிய மாணவா் படைப் பிரிவை கொண்ட பள்ளிகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டம் 52 கிலோ மீட்டா் தொலைவு கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது. புயல் கால பாதிப்பின்போது மக்களை பள்ளிகளில் தங்கவைத்தால், அவா்களுக்கான உதவிகளை தேசிய மாணவா் படை மூலம் செயல்படுத்த திட்டமிட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கற்பித்தல் பயிற்சி

ஆசிரியா் பயிற்சி (பி.எட்) முடித்தவா்கள் 80 நாள்கள் நேரடி கள பயிற்சியை பெறுவது வழக்கம். அதன்படி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆசிரியா் பயிற்சி முடித்த 500 போ் அவா்களது ஊா் அடிப்படையில், ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இணையதளம் மூலம் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளனா். இப்பயிற்சியை பெறுவதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி அனுமதிக்கான உத்தரவை சனிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT