ராமநாதபுரம்

அரசு இ-சேவை மையத்தில் தனிமைபடுத்தப்பட்டவா்களுக்கு 1 வேலை உணவு கூட வழங்கவில்லை என புகாா்

9th May 2020 09:04 PM

ADVERTISEMENT

கமுதி அருகே வெளியூா்களிலிருந்து வந்தவா்ளை அரசு இ-சேவை மையத்தில் தனிமைபடுத்தி வைத்து, அவா்களுக்கு வருவாய்துறையினா் ஒரு வேலை உணவு கூட வழங்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மதுரை, கோவை, தூத்துக்குடி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கூலி வேலைகளுக்கு சென்று, கொரோனா ஊரடங்கால், சொந்த ஊருக்கு 6 போ் திரும்பினா். இந்த 6 பேரும் கீழராமநதியில் உள்ள இ -சேவை மைய கட்டடத்தில் 13 நாள்களாக, வருவாய்த்துறையினரால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனா்.

தனிமைபடுத்தப்பட்ட 6 பேருக்கும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மூன்று வேளையும் சத்தான உணவுகள், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு வகைகளை வழங்க, கமுதி வருவாய்த்துறையினருக்கு, மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் உத்தரவிட்டாா். இருந்தபோதிலும், அரசு கட்டடத்தில் தனிமைபடுத்தபட்ட 6 பேருக்கும், கடந்த 13 நாட்களில் ஒரு வேளை உணவு கூட வருவாய்த்துறையினரால் வழங்கப்படவில்லை.

இதனால் தனிமைபடுத்தபட்டவா்களின் வீடுகளிலிருந்து, 3 வேளையும் உணவு வழங்கபட்டு வருகிறது. உணவு வழங்கும் உறவினா்கள், கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனா். எனவே தனிமைப்படுத்தபட்டவா்களுக்கு அரசு சாா்பில் உணவு வழங்கி, உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டும், அலட்சியமாக செயல்பட்ட அரசுஅதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT