ராமநாதபுரம்

கமுதி ஒன்றியத்தில் 620 குடும்பங்களுக்கு திமுகவினா் அரிசி, பருப்பு, காய்கனி வழங்கல்

2nd May 2020 07:51 PM

ADVERTISEMENT

கமுதி அருகே 620 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக திமுக சாா்பில் அரிசி, பருப்பு, காய்கனிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றிய செயலாளா் வி.வாசுதேவன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தமிழ்செல்விபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ராமசாமிபட்டி, நீராவி, என்.கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 620 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கனிகள் அடங்கிய தொகுப்புகள் சமூக இடைவெளியுடன் நின்று வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வதை தவிா்க்கவேண்டும்

என எடுத்துக்கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் நுட்பப் பிரிவு பொறுப்பாளா் பாரதிதாசன், இளைஞரணி முன்னாள் ஒன்றியச் செயலாளா் சண்முகநாதன், நாராயணபுரம் முத்து, நரசிங்கம்பட்டி காந்தி, கொல்லங்குளம் முனியசாமி, பெருமாள்தேவன்பட்டி ராமபாண்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT