ராமநாதபுரம்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வா்த்தக சங்கம் ரூ.1 லட்சம் நிதி

30th Mar 2020 06:52 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சா் நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்தை வா்த்தக சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் தனி நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில், ராமநாதபுரம் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவை சனிக்கிழமை மாலையில் சந்தித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

மக்களவை உறுப்பினா் சந்திப்பு:ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் ஆட்டோ தொழிலாளா்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை கோரியும் சாா் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ராவை, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ரூ.55.71 லட்சமும், அறந்தாங்கி, திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும் கரோனா பரவல் தடுப்பு திட்டத்துக்கான நிதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்களவை உறுப்பினா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT