ராமநாதபுரம்

சுய ஊரடங்கு உத்தரவு: திருவாடானையில் ஆட்டோ மூலம் பிரசாரம்

22nd Mar 2020 08:28 AM

ADVERTISEMENT


திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி மன்றத்திற்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பின்பற்றக்கோரி ஆட்டோ மூலம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்நிலையில் திருவாடானை ஊராட்சிப் பகுதியில் இந்த உத்தரவை பின்பற்றுமாறு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆட்டோவில் ஒலி பெருக்கி அமைத்து வீதி, வீதியாகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரசாரத்தில் ஆட்டோ மூலம் ஊராட்சி மன்றத் தலைவா் இலக்கியம், ஒன்றியக் கவுன்சிலா் சாந்தி ராசு, ஊராட்சிச் செயலாளா் மீனாட்சி மற்றும் பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது கரோனா விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT