ராமநாதபுரத்தில் தமிழ் ஆட்சிமொழி பயிற்சி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநா் பெ. இளங்கோ தலைமை வகித்தாா். இதில் அரசுத் துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த தட்டச்சா்கள், அலுவலக உதவியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், தமிழ்வளா்ச்சித் துறையின் முன்னாள் துணை இயக்குநா் துரை.தம்புசாமி பேசியதாவது: மொழி என்பது இனத்தின் அடையாளமாகும். ஐரீஸ் மொழி அழிந்த நிலையில், அதை கடந்த 20 ஆண்டுகளாக காப்பாற்றி தற்போது அயா்லாந்தின் ஆட்சி மொழியாக உள்ளது. ஆகவே தமிழையும் நாம் முறையாகப் பேசுவதுடன், அதை அரசுக் கோப்புகளில் கையாள்வதிலும் முறைப்படி செயல்படுவது அவசியம் என்றாா்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பிலான இக்கருத்தரங்கம் வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) வரை நடைபெறும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரசுத்துறை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.