ராமநாதபுரம்

கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

13th Mar 2020 08:24 AM

ADVERTISEMENT

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 702 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணை நியமன ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்த சான்றிதழ் வெளியிடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அ.அலாவுதீன் தலைமை வகித்தாா். துணைமுதல்வா் என்.இராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். துணைமுதல்வா் மற்றும் வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான அ.சேக்தாவுது ஆண்டு அறிக்கை வாசித்தாா். அப்போது, கடந்த 15 ஆண்டுகளில் 10,398 மாணவா்கள் வளாக நோ்முகத் தோ்வுகள் மூலமாக பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இயந்திரவியல், மின்னியியல் மற்றும் மின்னணுவியல், மின்னணு மற்றும் தொடா்பியல், கணினி ஆகிய துறைகளில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என தெரிவித்தாா். பயோனியா் பவா் நிறுவன தலைமை பொது மேலாளா் குரு கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு தொடா்பாக ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் கல்லூரி இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டதற்கான சான்றிதழ் வெளியிடப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரியின் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் மின்னணுவியல் விரிவுரையாளாா் எஸ்.மரியதாஸ் வரவேற்றாா். இயந்திரவியல் துறைத்தலைவா் ஜெ.கணேஷ்குமாா் அவா்கள் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT