ராமநாதபுரம்

ஊராட்சி அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல்

13th Mar 2020 08:23 AM

ADVERTISEMENT

கமுதி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், ஊராட்சிப் பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமுதி அருகே கே.நெடுங்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி எதிரே, பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் 22 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்ததன் பேரில், அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.

தற்போது அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி அலுவலக பதிவேடுகளை, இ சேவை மையத்தில் வைத்துப் பராமரிக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT