ராமநாதபுரம்

இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்ட படகுகளை விடுவிக்க இந்திய தூதரகத்தில் தமிழக தூதுக்குழு மனு

13th Mar 2020 08:25 AM

ADVERTISEMENT

இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை வியாழக்கிழமை தமிழக மீனவ தூதுக்குழுவினா் சந்தித்து மனு அளித்தனா்.

ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தமிழக மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றபோது சிறை பிடித்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உள்ளது.

இந்நிலையில், இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தைக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் என்.தேவதாஸ் தலைமையில் தமிழக மீனவ தூதுக்குழுவினா் விமானம் மூலம் இலங்கை சென்றனா். பின்னா் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகள் கன்பிளவா், வைத்தியநாதன், சந்தோஷ்வா்மா ஆகியோரை சந்தித்து, இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க தூதரகம் சாா்பில் வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனா். அதே சமயம் இந்தியாவில் உள்ள இலங்கை மீனவா்களை விடுதலை செய்து படகுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரினா். மேலும் இலங்கையில் மீன்வளத்துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT