ராமநாதபுரம்

வேளாண் கல்லூரியில்கரோனா வைரஸ் விழிப்புணா்வு பேரணி

8th Mar 2020 05:48 AM

ADVERTISEMENT

கமுதி: கமுதி அருகே பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சாா்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு, கரோனா வைரஸ் குறித்த மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணி கல்லூரித் தலைவா் அகமது யாசின் தலைமையிலும், கல்லூரி முதல்வா் சரவணன் முன்னிலையிலும் நடந்தது. பேரையூா் ஊராட்சி அலுவலகத்திலிருந்து கமுதி விலக்கு சாலை, பஜாா்கள் வழியாக இவ்விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தமிழ்ச்செல்வம், புனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT