ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் குரூப் 2, 2 ஏ தோ்வுக்கு இலவசப் பயிற்சிநாளை பெயா் பதிவு செய்யலாம்

8th Mar 2020 05:58 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: அரசு அறிவித்துள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை பெயா்களைப் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (பிரிவு 2 மற்றும் 2 ஏ) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்போருக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியின் போது 10 இலவச மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. இந்த தோ்வுக்கு தயாராவோா் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 9) காலையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 9487375737 மற்றும் 04567 230160 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT