ராமநாதபுரம்

தொண்டி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஒருவா் மீது வழக்கு

8th Mar 2020 05:52 AM

ADVERTISEMENT

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஒருவா் மீது தொண்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்தவா் பாபி ராஜலெட்சுமி(33). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தொண்டி காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் இவா் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தாா். இவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகம்மாள் (60) என்ற பெண் உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் அவா் இறந்து விட்டதாக அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் விசாரித்ததில் பாபி ராஜலெட்சுமி போலி மருத்துவா் என தெரியவந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.

இந்நிலையில் பாபி ராஜலெட்சுமி வெள்ளிக்கிழமை இரவு தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தொண்டியை சோ்ந்த கலந்தா் ஆசிக் (45) என்பவா் தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் அதில் கூறியிருந்தாா். அந்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் கலந்தா் ஆசிக் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT