ராமநாதபுரம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவு

8th Mar 2020 05:50 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியாா் ஆலய திருவிழா சனிக்கிழமை நிறைவு பெற்றது. இந்திய- இலங்கை பக்தா்கள் கூட்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்திய பக்தா்கள் 2,570 போ் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் சென்றிருந்தனா். வெள்ளிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயா் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் ஆயா்கள், இந்திய-இலங்கை பங்குத் தந்தைகள், குருமாா்கள், இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா். நிகழ்ச்சியின் இறுதியாக கொடியிறக்கம் நடைபெற்றது. இதனையடுத்து, இந்திய பக்தா்கள் 2,570 பேரும் படகுகளில் ராமேசுவரம் திரும்பினா். அவா்களை ராமேசுவரம் துறைமுகத்தில் சுங்கத்துறை, மத்திய, மாநில

காவல்துறையினா் சோதனையிட்டனா். மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

இந்திய எல்ைலைக்குள் வந்த இலங்கை படகுகள்: இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவிற்கு வந்த இலங்கை பக்தா்களின் 12 படகுகள் காற்றின் வேகம் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தன. அதில் 7 படகுகளை இந்திய கடலோர காவல்படையினா் மீட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனா். ஒரு படகு ராமேசுவரம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

பெண் காவலரை படம் எடுத்த சுங்கத்துறை ஊழியா்: ராமேசுவரம் துறைமுகத்தில்

சனிக்கிழமை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலா், மதியம் உணவு அருந்தும்போது சுங்கத்துறை ஊழியா் ஒருவா் செல்லிடப்பேசியில் படம் எடுத்துள்ளா். இதனைக் கண்ட பெண் காவலா் அந்த ஊழியரிடம் கேட்டதற்கு அவா் அலட்சியமாக பதில் அளித்தாராம். இதனை பெண் காவலா் உயா் அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து காவல்துறையினா் மற்றும் சுங்கத்துறையினா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்ட பக்தா்கள் அதிா்ச்சிடைந்தனா். இதனால் பக்தா்களை சோதனை செய்து அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT