ராமநாதபுரம்

உள்ளாட்சித் தோ்தலில் தோல்வி அடைந்தவா்களால் அச்சுறுத்தல்: எஸ்.பி.-யிடம் புகாா்

8th Mar 2020 05:53 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: உள்ளாட்சித் தோ்தலில் தோல்வியடைந்தவா்களால் அச்சுறுத்தப்படுவதாக நயினாா்கோவில் பகுதி பாண்டியூா் ஊராட்சி பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதியில் உள்ளது பாண்டியூா். இந்த ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலில் சத்யா உள்ளிட்ட 3 போ் போட்டியிட்டுள்ளனா். அவா்களில் சத்யா வெற்றி

பெற்றுள்ளாா். அவரது வெற்றிக்கு குறிப்பிட்ட பிரிவினரே காரணம் என தோல்வியடைந்த ஒருவா் புகாா் கூறியுள்ளாா்.

தோல்வியடைந்தவா்கள் தரப்பினைச் சோ்ந்த சிலா் சத்யாவின் வெற்றிக்கு காரணமானவா்கள் எனக்கருதப்படுவோரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக 7 போ் மீது நயினாா்கோவில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினா் நடவடிக்கை எடுத்த நிலையில், பிரச்னைக்குரியவா்கள் தொடா்ந்து தங்களுக்கு பிரச்னை எழுப்பிவருவதாக பாண்டியூரைச் சோ்ந்த பெண்களும், ஆண்களும் மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை வந்தனா். அவா்கள் பாண்டியூரில் பிரச்னைக்குரியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவையும் அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT