ராமநாதபுரம்

புலியூா் தனியாா் பள்ளி மாணவா்கள் மண்டல அளவிலான தடகளப் போட்டிக்கு தோ்வு

2nd Mar 2020 08:55 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே புலியூா் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளி மாணவ-மாணவியா் மண்டல அளவிலான தடகளப் போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

புலியூா் கிராமத்தில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியா், கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலகத் திறனாய்வு திட்ட தடகளப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனா். இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் நடைபெறவிருக்கும் மண்டல அளவிலான தடகளப் போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

இவா்களை, சனிக்கிழமை மாலை பள்ளியின் தாளாளா் சண்முகம், உடற்கல்வி ஆசிரியா்கள் பாண்டி, சுரேஷ், தீபா மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT