ராமநாதபுரம்

கமுதியில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

2nd Mar 2020 08:55 AM

ADVERTISEMENT

கமுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 67 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கமுதி பெருமாள் கோயில் அருகே திமுக மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் உத்தரவின்பேரில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், வடக்கு மாவட்ட கவுன்சிலருமான வி.வாசுதேவன் தலைமையிலும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ் முன்னிலையிலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னா் சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கமுதி திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிா்வாகிகள், தொண்டா்கள், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிளைச் செயலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT