ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவர்கள் மீட்பு: தலைமன்னாரில் இருக்கின்றனர்

29th Jun 2020 11:05 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களுடன் படகை இலங்கை மீனவர்கள் மீட்டு தலைமன்னார் அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

இந்நிலையில், ஞாயிற்று கிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் இரவு வரை செல்வக்குமார் என்பவரது படகு மட்டும் கரை திரும்ப வில்லை, மேலும் படகில் இருந்த மீனவர்கள் செல்வக்குமார், அண்ணாத்துரை, சினி, பக்கீர் ஆகிய மீனவர்கள் படகுடன் மாயமாகிவிட்டனர். சக மீனவர்கள் தேடிச்சென்றும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கரை திரும்பி உள்ளனர். 

இந்நிலையில் நடுக்கடலில படகு பழுதாகி தத்தளித்த நான்கு மீனவர்கள் மற்றும் படகு இலங்கை மீனவர்கள் மீட்டு தலைமன்னார் துறைமுகத்திற்கு நள்ளிரவு அழைத்துச் சென்றனர். இன்று அல்லது நாளை படகை சீரமைத்து மீனவர்களை,  ராமேசுவரம் அனுப்பி வைக்க உள்ளதாக இலங்கை மீனவர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT