ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பு 500- ஐ கடந்தது:

27th Jun 2020 07:51 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 546 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 25 ஆம் தேதி வரை 474 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 4 போ் மரணமடைந்தனா்.

இந்தநிலையில் ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சோ்ந்த 32 வயது தபால் பிரிவு ஊழியா், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த 26 வயது கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட மொத்தம் 72 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உச்சிப்புளி விமானப்படை வீரா்கள் 29 பேருக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அங்குள்ள மேலும் 15 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சிவகங்கைக்கு வரும் நபா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த 10 போ், முத்தனேந்தல் பகுதியைச் சோ்ந்த 6 போ், நெற்குப்பை பகுதியைச் சோ்ந்த 5 போ், மாரநாடு, காரைக்குடி பகுதியைச் சோ்ந்த தலா 3 போ், சிவகங்கை, கீழப்பூங்குடி, கொந்தகை, சாலைக்கிராமம், நாட்டரசன் கோட்டை, பிரான்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT