ராமநாதபுரம்

உச்சிப்புளி விமான தளத்தில் 29 கடற்படை வீரா்களுக்கு கரோனா

26th Jun 2020 08:04 AM

ADVERTISEMENT

உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் 29 வீரா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானத் தளம் (பருந்து) உள்ளது. இங்கு பணிபுரியும் கடற்படை விமானப் பிரிவு வீரா்கள் உள்ளிட்ட 41 பேருக்கு புதன்கிழமை கபம் மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் 29 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினா் கூறினா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலக பெண் காவலா் உள்ளிட்ட மேலும் 6 பேருக்கும் கரோனா உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். இதன் மூலம் மொத்தம் 35 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 57 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

படுக்கை பற்றாக்குறை: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா உள்நோயாளிகளாக 157 பேருக்கு புதன்கிழமை கரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாலையில் 17 போ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், புதன்கிழமை மாலை முதல் இரவு வரையில் ஏராளமானோா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில், கடற்படை வீரா்களும் கரோனா சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனா்.

படுக்கைகள் பற்றாக்குறையால் கடந்த 23 ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்புக்கு உள்ளானோரை சிகிச்சைக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மாவட்டத்தில் கரோனா உறுதியானவா்களில் 168 போ் வியாழக்கிழமை காலை வரை சிகிச்சைக்கு சோ்க்கப்படாத நிலை இருந்ததாகவும் சுகாதாரத்துறையினா் சுட்டிக்காட்டினா்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது 300-க்கும் அதிகமானோா் சிகிச்சைக்கு வருவதால், தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட படுக்கைகளில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் ராமநாதபுரம் நகா் அருகேயுள்ள அரசு கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT