ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மூன்றாவது மீனவரின் சடலமும் மீட்பு

21st Jun 2020 06:00 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் மாயமான மூன்றாவது மீனவரான மலர் வண்ணனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 13ஆம் தேதி ஹெட்டோ என்பவரது விசைப்படகில் மலர் வண்ணன் (55), ரெஜின்பாஸ்கர் (43) ஆஸ்டின்(19) என்ற சுஜிந்திரா, ஜேசு(60) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற விசைப்படகு மாயமானது. இதையடுத்து அதனை தேடும் பணி நடைபெற்று வந்ததது. 

இந்தநிலையில், ஜேசு என்ற மீனவர் கோட்டை பட்டணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதில் ரெஜின்பாஸ்கர் உடல் வெள்ளிக்கிழமை கோடியாக்கரை கரைக்கு மீட்டனர். ஊடல் என்று கூறி ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சனிக்கிழமை அதே பகுதியில் ஆஸ்டின்(எ)சுஜிந்திரா உடல் மீட்டனர். 

மேலும் மலர் வண்ணன் உடலைத் தொடர்ந்து மீனவர்கள் தேடி வந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு கடல் பகுதியில் இருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT