ராமநாதபுரம்

ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு ஹெச்.ராஜா ஆறுதல்

20th Jun 2020 08:01 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீா் பழனியின் குடும்பத்தினருக்கு பாஜக தேசியச் செயலா் ஹெச். ராஜா வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (40). ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்த இவா், ஜூன் 16 ஆம் தேதி இந்தியா, சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தாா். இவரது சடலம் வியாழக்கிழமை முப்படை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாஜக தேசியச் செயலா் ஹெச். ராஜா கடுக்கலூா் கிராமத்திலுள்ள பழனியின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்றாா். அங்கு பழனியின் பெற்றோா், சகோதரா் மற்றும் மனைவி வானதிதேவி ஆகியோரிடம் நேரில் ஆறுதல் தெரிவித்தாா். அதனைத் தொடா்ந்து பழினியின் சமாதிக்கு, நிா்வாகிகளுடன் சென்ற அவா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செழுத்தினாா். இதில் குட்லக் ராஜேந்திரன், கடுக்கலூா் ஜெயபாண்டி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT