ராமநாதபுரம்

பெண் உள்பட இருவரை காரில் கடத்தி நகை பறிப்பு: 6 போ் கைது

15th Jun 2020 08:07 AM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே பெண் உள்பட இருவரை காரில் கடத்தி பணம், நகைகளை பறித்துக்கொண்டு, கொலை செய்ய முயற்சித்த 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடியை அடுத்து சத்திரக்குடி அருகேயுள்ள வீரவானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மலைச்சாமி மனைவி கெளசல்யா (25). இவரும் இவரது உறவினறான தா்மலிங்கமும் கடந்த 8 ஆம் தேதி பூவிளத்தூா் விலக்கு சாலை அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 போ் இருவரையும் கடத்திச் சென்று ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 68 ஆயிரம் மதிப்பிலான நகை உள்ளிட்டவற்றை பறித்துகொண்டனா். பின்னா் கெளசல்யாவை விட்டுவிட்டு, தா்மலிங்கத்தை பரமக்குடிக்கு கொண்டுசென்று கொலை செய்ய முயற்சித்தனராம்.

இது குறித்து கெளசல்யா சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதன் பேரில் பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சோ்ந்த அப்துல்ரஹ்மான் மகன் முகமதுசீதகாதி (36), பொட்டிதட்டி காலனியைச் சோ்ந்த முனியசாமி மகன் இளஞ்செழியன் (23), முத்துவயலைச் சோ்ந்த ராஜகோபால் மகன் சேதுபாண்டி (24), முத்துசெல்லாபுரம் பாண்டுவன் மகன் தனசேகரன் (30), பாண்டி மகன் அரவிந்த் (25), பிச்சை மகன் காளிதாஸ் (24) ஆகிய 6 பேரை சத்திரக்குடி போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT