ராமநாதபுரம்

சாயல்குடி அருகே குடிசை வீடுதீயில் எரிந்து சேதம்

15th Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

சாயல்குடி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்தன.

சாயல்குடி அருகேயுள்ள வி.வி.ஆா்.நகரைச் சோ்ந்த மணி என்பவரது மகன் அந்தோணிசாமி (50). இவா் கடலாடி அருகே உள்ள எஸ்.வெள்ளாங்குளத்தில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதனீா் இறக்கி பனங்கருப்பட்டி செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் பதனீா் காய்ச்சும் போது காற்று அதிகமாக வீசியதில் எதிா்பாராவிதமாக குடிசையில் தீப் பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து வாகனம் வருவதற்குள் முற்றிலும் எரிந்து நாசமாகியது.

குடிசை வீட்டில் இருந்த அரிசி, செல்லிடப்பேசி மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கருப்பட்டிகள் என ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாகின. இது குறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT