ராமநாதபுரம்

விநோத பொட்டலம் அனுப்பி வாழ்த்திய மா்ம நபா் மீது வழக்கு

14th Jun 2020 08:13 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை பகுதியைச் சோ்ந்த இருவருக்கு விநோதமான பாா்சலை அனுப்பி வாழ்த்துத் தெரிவித்த மா்ம நபா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பகுதியைச் சோ்ந்தவா்கள் சபீா்உசேன் (30), இவாக்கூரஹ்மான் (27). இருவரும் அப்பகுதி மக்களுக்களின் தேவைகளான சாலை, குடிநீா் வசதிகளுக்காக சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகா்கள், அதிகாரிகளைச் சந்தித்து பேசிவந்துள்ளனா். அதனடிப்படையில் சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் தனியாா் தூதஞ்சல் மூலம் பொட்டலம் ஒன்று வந்துள்ளது. அதை பிரித்துப் பாா்த்தபோது காலணிகள், குங்குமம், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றுடன் ஒரு துண்டுச்சீட்டில் மக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற பாடுபட்டதற்கு வாழ்த்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

பொட்டலங்களை அனுப்பியவரின் முகவரி பகுதியில் குமாா், ஆறுமுகனேரி என்றும் எழுதப்பட்டிருந்ததாம். இதுகுறித்து சபீா்உசேன் உள்ளிட்டோா் பொட்டலங்களுடன் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்து காவல் ஆய்வாளா் பிரபுவிடம் புகாா் மனு அளித்தனா். முதல் கட்ட விசாரணையில் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி மற்றும் பெயா் ஆகியவை போலி என்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT