ராமநாதபுரம்

சமூக ஊடகங்களில் தவறாக பெண் சித்தரிப்பு: ஒருவர் கைது

11th Jun 2020 10:16 AM

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் பெண் படத்தை தவறாக சித்தரித்தவரை
 ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து
 விசாரித்து வருகின்றனர்.

பிரபல இணையதள தொடர் தயாரிப்பாளர் மனைவியின் படத்தை குறிப்பிட்ட பெயரல் சுட்டுரை கணக்கு வைத்திருப்பவர் தவறாக சித்தரித்தும், மத மோதலை
ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்புவதாக புகார்
 எழுந்தது. 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சமூக ஊடகப்
 பிரிவின் சார்பு ஆய்வாளர் ரிச்சர்ட்சன் நகர் காவல் நிலையத்தில் புகார்
 அளித்தார். புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு வளைவு வீதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (33) என்பவர் சுட்டுரை கணக்கு மூலம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பரப்பியது தெரியவந்தது. 

ADVERTISEMENT

அதனடிப்படையில் அவரை புதன்கிழமை இரவு பிடித்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

Tags : Ramanathapuram arrest ராமநாதபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT