ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம்

11th Jun 2020 08:16 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளிக்க காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு நேரில் வருவதை குறைத்துக் கொள்ளவேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில் மக்கள் தங்கள் குறைகளை காவல் கண்காணிப்பாளருக்கான சிறப்பு செல்லிடப்பேசியான 9489919722 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் மிக முக்கியமான தங்களது குறைகளை அந்தந்த உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் நேரில் சென்று மனுவாகத் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT