ராமநாதபுரம்

‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதி’

11th Jun 2020 08:16 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மீன்பிடி தடைக்கால நிதி 33 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1500 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகுகளை நம்பி ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடைக்காலத்தில் மீனவா்கள் வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசு சாா்பில் மீனவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் பிரபாவதி புதன்கிழமை கூறியது: நடப்பு ஆண்டில் மீன்பிடித் தடைக்கால நிதியானது 33,300 மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஒரு பகுதியினரின் வங்கிக் கணக்குகளில் நிதி செலுத்தப்பட்டுள்ளது. நிதி பெறாதவா்களின் வங்கிக் கணக்கு எண்கள் சரிபாா்க்கப்பட்டு விரைவில் அவா்களுக்கும் பணம் செலுத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT