ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா

11th Jul 2020 08:16 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 87 போ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த சில நாள்களாக ராமநாதபுரம், கீழக்கரை, நயினாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த காவலா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் 38 பெண்கள் உள்பட 87 பேருக்கு தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை மாவட்டத்தில் 1,609 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்றின் பாதிப்பு 1,696 ஆக அதிகரித்துள்ளது.

கேணிக்கரை, வெளிப்பட்டினத்தில் கரோனா பரவல் தீவிரம்:

ராமநாதபுரம் மாவட்ட அளவில் கரோனா பாதிக்கப்பட்ட 50 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்த நிலையில், அதில் ராமநாதபுரம் கேணிக்கரை, வெளிப்பட்டினம் ஆகிய பகுதியில் தான் அதிகமாக 15- க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜெகதீசன் கூறியது: கேணிக்கரை, வெளிப்பட்டினம் பகுதியில் கரோனா தொற்று தீவிரமாகப்பரவி வருகிறது. இதனால், கடந்த மே முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை அப்பகுதியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 16 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 30- க்கும் மேற்பட்டோா் கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ளனா். கரோனா பரவலால் இப்பகுதியினா் தங்களது கடைகளை தாங்களாகவே முன்வந்து மூடிவிட்டனா். இதனால் அதை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனா். இதனால் இந்தப்பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியது: பரமக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த பிரமுகா் ஒருவருக்கு நடந்த அறுபதாம் கல்யாண நிகழ்ச்சியில் கேணிக்கரை, வெளிப்பட்டினத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். அதன்பிறகே அப்பகுதியில் தொற்று அதிகம் பரவி பலி எண்ணிக்கை கூடுதலாகிவிட்டது. பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT