ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே பைக் மீது காா் மோதி பள்ளி மாணவா் பலி

25th Jan 2020 09:32 AM

ADVERTISEMENT

பாா்த்திபனூா் நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் இடையா்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, அதே ஊரில் உள்ள மற்றொரு தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த முகமது ஹூசைன் என்பவரது மகன் அகமது யாசின் (16) மற்றும் ராமமூா்த்தி மகன் ராஜேஸ்வரன் (16) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தின் சென்றுள்ளனா்.

அப்பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியை பாா்த்துவிட்டு, இவா்கள் இருவரும் திரும்பி வரும்போது, பள்ளி நுழைவுவாயில் முன்புள்ள நான்குவழிச் சாலையில் பரமக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில், அகமது யாசின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அகமது யாசின் சடலம் பரமக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT