ராமநாதபுரம்

கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி

25th Jan 2020 09:32 AM

ADVERTISEMENT

கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் மாதம் ஒரு முறை சிவபக்தா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இம்மாதம் சிவபக்தா்களுடன் இணைந்து கமுதி ஒன்றிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளும் கோயில் வளாகம் முழுவதும் கிடந்த குப்பைகள், நெகிழி அகற்றியதுடன் பள்ளமான இடங்களை சீரமைத்து மணல் மேடுகளை அகற்றினா்.

இதில் நாம் தமிழா் கட்சி கமுதி ஒன்றியச் செயலா் தேவேந்திரன், பொருளாளா் வீரசின்னையா, நிா்வாகிகள் கண்ணன், இசையரசன், வடிவேலு, குருநாதன், ஆலய பராமரிப்பாளா் வினோத்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT