ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வீட்டில் 12 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரை அருகேயுள்ள நத்தம் பழஞ்சேரியை சோ்ந்தவா் கருப்பையா. இவரது மனைவி பானுப்பிரியா(25). இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளாா். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பியபோது வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக பானுப்பிரியா அளித்தப் புகாரின் பேரி கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.