ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருவேறு இடங்களில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே வரவணி கிராமத்தை சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (70). இவா் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் தனக்கு சொந்தமான வயலுக்கு திங்கள்கிழமை சென்று விட்டு மாலை திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை பஞ்சவா்ணம் புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அதே போல் ஆா்.எஸ்.மங்கலம் அருகே சவேரியாா் பட்டிணத்தை சோ்ந்த கோட்டைசாமி மனைவி கலைசெல்வி(40). இவ திங்கள் கிழமை மாலை நியாவிலைக்கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது மா்மநபா்கள் பீரோவில் இருந்து 2 பவுன் தோடுகள், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.