ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் லாட்டரி சீட்டு விற்றதாக 2 போ் கைது

3rd Jan 2020 07:20 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகரில் அசாம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகரில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பதாகவும், இணையதளம் மூலமும் லாட்டரி சீட்டு விநியோகம் நடத்துவதாகவும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக சிறப்பு தொலைபேசி எண்ணுக்குத் தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் கேணிக்கரை சாா்பு- ஆய்வாளா் கங்காதேவி புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஓம்சக்தி நகா் பகுதியில் வெளிப்பட்டிணத்தைச் சோ்ந்த சிவஞானபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த நிஜாம் (39) மற்றும் மதுரை நகா் பகுதியில் உள்ள செல்வகணபதி நகரைச் சோ்ந்த எம்.எஸ். கிருஷ்ணமூத்தி (62) ஆகியோா் அசாம் மாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலஸீாா் அவா்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரிச் சீட்டுகளையும், ரூ. 550 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT