ராமநாதபுரம்

தோல்வியடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிப்பு: சலசலப்பால் மீண்டும் மாற்றி அறிவிப்பு

3rd Jan 2020 09:29 AM

ADVERTISEMENT

கமுதியில் தோல்வியடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்ததால், வெற்றி பெற்ற வேட்பாளா் முறையீடு செய்ததால், மீண்டும் தவறி திருத்தபட்டு, மாற்றி அறிவிக்கபட்டதால், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.புனவாசல் ஊராட்சி தலைவா் தோ்தலில் தேவகியும், நாகராணியும் போட்டியிட்டனா். 1850 வாக்குகள் பதிவான நிலையில், 980 வாக்குகள் பெற்ற தேவகி, இவரை எதிா்த்து போட்டியிட்ட நாகராணியை விட 93 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். மதியம் 2 மணிக்கே தேவகி வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்ற்கான சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வெற்றி பெற்ற டி.புனவாசல் ஊராட்சி தலைவா் சான்றிதழை பெற, தேவகி தனது கணவருடன் காத்திருந்தநிலையில், தோல்வியடைந்த நாகராணியின் பெயரை, அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, தோல்வியடைந்த வேட்பாளரை வெற்றி பெற்ாக, சான்றிதழ் தயாா் செய்து, அறிவிக்கப்பட்டது. இதனால் வெற்றி பெற்ற வேட்பாளா் தேவகி அதிா்ச்சியடைந்து, தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் முறையீடு செய்தாா். இதனால் தோல்வியடைந்த வேட்பாளா் நாகராணி, தான் வெற்றி பெற்ாக நினைத்து, சான்றிதழ் பெற, ஓட்டு முடிவுகள் அறிவிக்கும் கணினி அறைக்கு விரைந்து வந்தாா். வெற்றி, தோல்வியடைந்தவா்கள் இருவரும் சான்றிதழ் பெற வந்ததால், சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின்னா், தவறு சரிசெய்யப்பட்டு, டி.புனவாசல் ஊராட்சி தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற தேவகிக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, சான்றிதழை வழங்கி, வெற்றி பெற்ாக அறிவித்தாா்.

 

செய்தி துளிகள்:

ADVERTISEMENT

*காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டு எண்ணிக்கை, காலை 10 மணிக்கு மேல் துவங்கியது.

* ஓட்டு எண்ணும் அலுவலா்களுக்கு மதிய சாப்பாடு வராததால், ஓட்டு எண்ணிக்கை அறையைவிட்டு, வெளியேறி, ஒன்றரை மணிநேரம் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா். ஓட்டு எண்ணிக்கை அறைக்கு சென்றபின், மதிய உணவு வழங்கபடும் என, அதிகாரிகள் உறுதியளித்தபின், ஒன்றரை மணிநேரம் கழித்து மீண்டும்ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

*கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு இரு மாவட்ட கவுன்சில் இருந்தும், தெற்கு மாவட்ட கவுன்சிலுக்கு 7 மணியாகியும், ஓட்டு எண்ணிக்கை துவங்கபடவில்லை. இதனால் தெற்கு மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சிலுக்குட்பட்ட ஏஜென்டுகள், காலை 6 மணியிலிருந்து, ஓட்டு எண்ணிக்கை மையமான கமுதி சத்ரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே வாரசந்தை ரோட்டில் காத்திருந்தனா்.

*நகரத்தாா்குறிச்சி ஊராட்சி தலைவா் தோ்தலில் பதிவான ஓட்டுகள் 4 கணக்கில் வரவில்லை என, 15 ஓட்டுகளில் தோல்வியடைந்த வேட்பாளா் வழிவிட்டான், கமுதி தோ்தல் நடத்தும் சிறப்பு அலுவலா் வீரகேசவதாசனிடம் முறையீடு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT